மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர்

கடலூர் அரசு பள்ளியில் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.

Update: 2023-07-29 18:45 GMT

கடலூர் செம்மண்டலம் பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென சென்றார். பின்னர் அவர், அங்கு குழந்தைகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து காப்பகத்தில் குழந்தைகளுக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் அந்த காப்பகத்தின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் அருண்தம்புராஜ், அங்கிருந்த மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்