கலெக்டர் தகவல்

சென்னையில் நடக்க உள்ள நவராத்திரி கண்காட்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்கலாம்.

Update: 2023-09-22 18:45 GMT

சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அடுத்தமாதம்(அக்டோபர்) 7.10.2023 முதல் 20.10.2023 வரை நவராத்திரி கண்காட்சி நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களான பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள், பரிசுப்பொருட்கள், மெழுகுவர்த்தி மற்றும் வீட்டில் செய்யப்படும் சாக்லெட், இனிப்பு பொருட்கள் மற்றும் மண் பானைகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குத்தல் அரிசி, ஊறுகாய், வற்றல், வடகம், பனை வெல்லம், மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள, மீன் ஊறுகாய் போன்றவற்றை விற்பனை செய்யலாம். இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். இந்த தகவலை நாகை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்