கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது கலெக்டர் வழங்கினார்

கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேருக்கு பசுமை சாதனையாளர் விருது கலெக்டர் வழங்கினார்

Update: 2022-06-06 17:50 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டு பணியை தொடங்கி வைத்தார். மேலும் பசுமை சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அதன்படி தொழிற்சாலைகள் பிரிவில் டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி லிமிடெட், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிரிவில் கென்னத் ஆண்டர்சன் நேட்சர் சொசைட்டிக்கும், தனிநபர் பிரிவில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி பயிற்றுனரும், தேசிய பசுமைப்படை செயலாளருமான பவுன்ராஜ் ஆகியோருக்கு விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இதில் சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் தீனதயாளன், ரங்கசாமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ராபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்