கோவை: கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2023-07-04 17:01 GMT

கோவை,

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில், 4 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், பருன்கோஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வெளியான முதல் கட்ட தகவலில், கல்லூரியில் ஏற்கனவே இருந்த பக்கவாட்டு சுவரை ஒட்டி 10 அடி அளவிற்கு பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்ததாகவும் அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் அதில் சிக்கினர் என கூறப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 2 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தனர். உயிரிழந்த 4 பேரில் மூன்று பேர் ஆந்திர பிரதேச மாநில பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் வடமாநில தொழிலாளி எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்