கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டது.

Update: 2023-09-27 17:53 GMT

பெரம்பலூர் கடைவீதியில் உள்ள மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். மேலும் அவர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணி ரகங்களை பார்வையிட்டு கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையின்போது, ரூ.25 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டிற்கான தீபாவளி விற்பனை இலக்காக ரூ.55 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். "கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அவர்களின் உழைப்புக்கு உரிய மரியாதையினை செலுத்திடும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் துணிகளை வாங்கி அவர்களுக்கு உதவிட வேண்டும், என்றார்.

இதில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மண்டல மேலாளர் அம்சவேணி, மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், விற்பனை நிலைய மேலாளர் ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்