அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-07-29 18:01 GMT

வேலாயுதம்பாளையம் அருகே தளவாப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2-வது ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மாதுளம் பழ முத்துகளால் அலங்காரம் செய்யப் பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்