சத்தியமங்கலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

சத்தியமங்கலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி;

Update:2023-04-03 02:28 IST

சத்தியமங்கலம்

ஈஸ்டர் தினத்துக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்கள். அதன்படி சத்தியமங்கலத்தில் உள்ள 24 கிறிஸ்தவ சபைகள் இணைந்து குருத்தோலை ஞாயிறு பவனியை நேற்று நடத்தின.

காலை 7.30 மணி அளவில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் சி.ஜி.ஐ.எம். தேவாலயத்தில் இருந்து பவனி தொடங்கியது. அப்போது கைகளில் பதாகைகள், குருத்தோலைகளை ஏந்தி தென்னை ஓலைகளை அசைத்து பாடியபடி பிரார்த்தனை செய்து கொண்டு சென்றனர். எஸ்.பி.எஸ்.கார்னர், மைசூரு ட்ரங்க்ரோடு, ஆற்றுபாலம், அத்தாணி ரோடு வழியாக சென்ற பவனி வடக்குப்பேட்டை புனித அருளானந்தர் ஆலயத்தில் முடிவடைந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அனைத்து சபை கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் செய்திருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்