உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு

சின்னசேலத்தில் உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-05-07 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் பேரூராட்சி திடக்கழிவு வளம் மீட்பு பூங்கா சின்னசேலம் வடக்கு கிராம எல்லையான அரசு ஆஸ்பத்திரி அருகில் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தினை சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நிலமாற்றம் செய்ய அரசுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கும் சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் நிலமாற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்ைத நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து சின்னசேலம் தாசில்தார் அலுவலகம் அருகில் அமைய உள்ள உழவர் சந்தைக்கான இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது பற்றி அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சின்னசேலம் தாசில்தார் இந்திரா, மண்டல துணை தாசில்தார் மனோஜ் மணியன், வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பிரிவினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்