அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-16 07:43 GMT

சென்னை,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தன்னுடைய 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்களது கட்சி உங்களுடன் உறுதியாக இருப்பதால், மக்களுக்கும் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். மக்களுக்கு சேவை செய்யும், உங்களின் அயராத அர்ப்பணிப்பை இந்த ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்