ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல் அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.