திடீரென செத்து மடிந்த கோழிகள்

மானூர் பகுதியில் திடீரென செத்து மடிந்த கோழிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-04 19:10 GMT

மானூர்:

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள குறிச்சிகுளம், தெற்குப்பட்டி கிராமங்களில் திடீரென கோழிகளுக்கு நோய் பரவி செத்து மடிகின்றன. குறிச்சிகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழி பண்ணையில் நேற்று முன்தினம் சுமார் 2,500 கோழிகளும், நேற்று 1400 கோழிகளும் திடீரென செத்து விழுந்தன.

இதுதொடர்பாக கால்நடை துறையினர் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்