சென்னை பல்கலைக்கழகம்: தொலைதூர கல்வி செமஸ்டர் தேர்வு - இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

தொலைதூர கல்வி செமஸ்டர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

Update: 2024-09-26 19:17 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூர கல்வி நிறுவனத்தின் கீழ் இளநிலை, முதுநிலை, தொழிற்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கான ஜூன் மாத செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) தொடங்கப்பட உள்ளது.

இதறகான ஹால்டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், www.ideunom.ac.inஎன்ற இணையதளத்தில் தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்