அவதூறு வழக்கு: அப்பாவு அக்.18-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு

சபாநாயகர் அப்பாவு அக்டோபர் 18-ந்தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-09-26 15:38 GMT

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட்டு, வழக்கு தொடர அனுமதி அளித்ததையடுத்து, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கை பாபு முருகவேல் தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராகி சம்மனை பெற்றுக் கொண்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது சட்டப்படி தவறு. அடுத்த விசாரணையின் போது கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து, விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்