13 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் 13 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பயிற்சி முடித்த 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-05-20 20:31 GMT

தஞ்சாவூர:

தஞ்சை மாவட்டத்தில் 13 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பயிற்சி முடித்த 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நியமனம்

தஞ்சை மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் பணியிட மாறுதல் மற்றும் நியமனம் செய்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் அழகேசன் மாவட்ட கலெக்டர் அலுவலக இ பிரிவு தலைமை உதவியாளராகவும், நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் தர்மராஜ் மாவட்ட கலெக்டர் அலுவலக சி பிரிவு தலைமை உதவியாளராகவும், நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதித்துறை பயிற்சி முடித்து துணை தாசில்தார் செந்தில்குமார் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை துணை தாசில்தாராகவும், நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் பூவந்திநாதன் பூதலூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், நீதித்துறை பயிற்சி முடித்த துணை தாசில்தார் பாக்கியராஜ் கும்பகோணம் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாறுதல்

பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலக தேர்தல் துணை தாசில்தார் கற்பகம் மாவட்ட கலெக்டர் அலுவலக ஒய் பிரிவு தலைமை உதவியாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக ஒய் பிரிவு தலைமை உதவியாளர் சந்திராள் பாபநாசம் கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை துணை தாசில்தார் சண்முகம் கும்பகோணம் மண்டல துணை தாசில்தாராகவும், கும்பகோணம் மண்டல துணை தாசில்தார் சமத்துவராஜ் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளர் விமல் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், பேராவூரணி தாலுகா கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் கண்ணகி பேராவூரணி தாசில்தார் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும், பேராவூரணி தாலுகா தேர்தல் துணை தாசில்தார் அகத்தியன் திருவையாறு தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பூதலூர்-ஒரத்தநாடு

திருவையாறு தாலுகா தேர்தல் துணை தாசில்தார் விவேகானந்தன் பாபநாசம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், ஒரத்தநாடு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் நல்லதம்பி பூதலூர் குடிமைப்பொருள் வழங்கல் தனித்துணை தாசில்தாராகவும், பூதலூர் குடிமைப்பொருள் வழங்கல் தனித்துணை தாசில்தார் யுவராஜ் ஒரத்தநாடு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், பூதலூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் சுந்தரசெல்வி திருவையாறு குடிமைப்பொருள் வழங்கல் தனித்துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவையாறு குடிமைப்பொருள் வழங்கல் தனித்துணை தாசில்தார் செல்வக்குமார் பட்டுக்கோட்டை தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், கும்பகோணம் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் கல்யாணகுமார் திருவிடைமருதூர் தாலுகா கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்