தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவானது தமிழில் வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்யம்

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவானது தமிழில் வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-12-17 22:45 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) மற்றும் இந்த மசோதாவின் வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) செய்யப்படவுள்ள திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான காலவரையறை 02-01-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்றோடு முடிவடைய இருந்த கருத்துக்கேட்புக் காலகட்டமானது நீட்டிக்கப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மிக முக்கியமான இந்த மசோதாவானது அந்தந்த மாநில மொழிகளில் தரப்படவேண்டும் என்ற அடிப்படையில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவானது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படவேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரியிருந்தார்.

கமல்ஹாசன் கடிதத்தில் குறிப்பிட்டபடி கருத்துக்கேட்பு காலத்தை தள்ளி வைத்த மத்திய அரசு, அவரின் இன்னொரு கோரிக்கையான இந்த மசோதா தமிழ் மற்றும் மாநில மொழிகளிலும் வெளியிடப்படவேண்டும் என்பதனையும் ஏற்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் வேண்டுகோள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்