மாநகராட்சி ஊழியரிடம் செல்போன்-சங்கிலி பறிப்பு

மாநகராட்சி ஊழியரிடம் செல்போன்-சங்கிலி பறிப்பு

Update: 2022-07-29 20:31 GMT

தஞ்சை-வல்லம் நம்பர் 1 சாலையை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 37). இவர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்தார். அங்கிருந்து தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தஞ்சை-வல்லம் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி எதிரே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கார்த்திக்கை மறித்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் வழக்குப்பதிவு செய்து செல்போன் மற்றும் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்