அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நெமிலியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2023-04-20 16:54 GMT

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் நகர பொருளாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்