போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்தவர் கிங்ஸ் (வயது 33). இவர் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைபட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அப்பகுதியில் தற்போது மணல் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மணல் மற்றும் மணல் லாரி பிடிப்பதில் கிங்ஸ்க்கும், சாமிதோப்பை சேர்ந்த சிவபெருமாள், ஆரல்வாய்மொழி ஜெபா உள்பட 3 பேருக்கும் விரோதம் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் சம்பவத்தன்று கிங்ஸ் ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் வந்தபோது மூவரும் சேர்ந்து கிங்சை அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிங்ஸ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சிவபெருமாள் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.