கட்டேரி, பக்கிரிதக்கா பகுதிரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கால்வாய்

கட்டேரி, பக்கிரிதக்கா பகுதி ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கால்வாய் அமைக்க ஒன்றிய குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Update: 2022-08-30 19:17 GMT

ஜோலார்பேட்டை

கட்டேரி, பக்கிரிதக்கா பகுதிரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க கால்வாய் அமைக்க ஒன்றிய குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை சரி செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். கட்டேரி, பக்கிரிதக்கா பகுதிகளில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி ஏற்கனவே தெரிவித்த கோரிக்கையின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டு தற்போதைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக தரைப் பாலங்களில் கால்வாய் அமைக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாச்சல் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் அதனை சீரமைக்கவும், பாச்சல் ஊராட்சியில் குப்பைகளை கொட்ட நிரந்தர இடத்தை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் எனவும், குருமான்ஸ் காலனி பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால் புதிய மேல்நிலைநீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் எனவும் பாச்சல் கவுன்சிலர் ஆர்.மணிகண்டன் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய குழு தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் (கிராம ஊராட்சி) உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்