வேலைவாய்ப்பு முகாமில் 71 பேர் தேர்வு

வேலைவாய்ப்பு முகாமில் 71 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-06-22 19:15 GMT

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ராஜாராமன் தலைமை தாங்கினார். கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வரவேற்றார். தமிழ்நாடு மாநில கல்லூரி கல்வி இயக்குனர் கீதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 18 தனியார் நிறுவனங்கள் பங்குபெற்ற இந்த முகாமில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 181 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 71 மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தேர்வு பெற்றனர். இவர்களில் 61 மாணவர்கள் அரசு கல்லூரியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன், கல்லூரி கல்வி இயக்கக சட்ட ஆலோசகர் மாதேஸ்வரி, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நான் முதல்வன் திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்