நல்லூரில்மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Update:2023-02-09 00:30 IST

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கினார். திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் திட்ட அலுவலர் ரமேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்திட்ட அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் வருவாய் துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், வேளாண்மை துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ப்பு துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உள்ளிட்டவை சார்பில் 260 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் அரசு துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்