இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் உண்ணாவிரதம்

இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் உண்ணாவிரதம்

Update: 2023-02-20 22:02 GMT


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இ்ந்தநிலையில் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில் 6 பேர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதிக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் அங்கு திடீரென அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, "தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது. தேர்தல் அதிகாரியிடம் முறையாக புகார் அளிக்க வேண்டும்", என்று அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு புகார் அளிப்பதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்