ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2023-02-04 21:51 GMT

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

வேட்பாளர் மேடை

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மேடை நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், செந்தில்பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு என்றைக்கும் மறக்க முடியாத ஊர். பெரியார் என்ற பெயரை எப்போதெல்லாம் உச்சரிக்கின்றோமோ அப்போது எல்லாம் ஈரோடு நினைவுக்கு வரும். தமிழகத்தில் 5 முறை முதல் -அமைச்சராக இருந்த கருணாநிதி, திராவிட இயக்கத்தின் 4-ம் தலைமுறையாக இருக்கின்ற தற்போதைய முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவராலும் நேசிக்க கூடிய ஊராக ஈரோடு உள்ளது.

அடிப்படை வசதிகள்

ஈரோட்டை சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக அடிப்படை வசதிகளை உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். தற்போது ஆட்சி பொறுப்பேற்று 1½ ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இன்னும் ஏறக்குறைய 3½ ஆண்டுகள் உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினர் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திட்டங்களை கொண்டு வரவும், செயல்படுத்தவும் ஆளுங்கட்சியால் மட்டுமே முடியும் என்பதால் ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். வெற்றி என்பது ஏற்கனவே உறுதியான ஒன்று. ஆனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வதன் மூலம் மக்களுக்காக உழைத்து வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்