அரசு பஸ்சில் டிரைவருக்கு மயக்கம்

திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் அரசு பஸ்சில் டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2022-05-20 17:39 GMT

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் அரசு பஸ்சில் டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிரைவருக்கு மயக்கம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தொண்டியக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது46). இவர் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் பணியில் இருந்தார். நேற்று மதியம் 2 மணி அளவில் பஸ் புறப்பட தயாரானது. பஸ்சில் பயணிகள் ஏறி காத்திருந்தனர். அப்போது சந்திரசேகரனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

சிகிச்சை

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பஸ் நிலையத்தில் இருந்த நேரக்காப்பாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் டிரைவர் சந்திரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், டிரைவர் சந்திரசேகரனுக்கு படபடப்பு காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

பஸ் புறப்படும் முன்பு டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்