செஞ்சியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

செஞ்சியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

Update: 2022-08-30 16:34 GMT


செஞ்சி, 

செஞ்சியில் சத்திர தெருவில் அங்காளம்மன் கோவிலும், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மாரியம்மன் கோவிலும் உள்ளது. இந்த 2 கோவில்களிலும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து மாரியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, அங்காளம்மன் கோவில் அறங்காவலர் கடம்பன் ஆகியோர் தனித்தனியே செஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் செஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்