கிணற்றில் பள்ளி மாணவி பிணம்

தியாகதுருகம் அருகே கிணற்றில் பள்ளி மாணவி பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-13 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே புதுபல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 40). இவரது மகள் மாதேஸ்வரி (15). கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி பார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஒருவரது கிணற்றில் மாணவி மாதேஸ்வரி பிணமாக கிடந்தாள். இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாணவி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்