திருவள்ளூர் அருகே குளத்தில் ஆண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர் அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட பிரயாம்பத்து பகுதியில் உள்ள குளத்தில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
இதை பார்த்த அந்த வழியாகச் சென்ற நபர்கள் உடனடியாக அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து திருமழிசை கிராம நிர்வாக அதிகாரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்து போனாரா அல்லது வேறு யாரேனும் அடித்து கொலை செய்து குளத்தில் வீசினார்களா? எப்படி இறந்தார்? என்பது பற்றி வெள்ளவேடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.