ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-10-08 13:00 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் இன்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொது செயலாளர் பாரி முன்னிலை வகித்து முகாம் தொடக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து அவர் முகாமில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தணிக்கையாளர் சரவணன், மாநில செயலாளர் ஜெயசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முரளி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்