பா.ஜ.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டுகின்றனர்
பா.ஜ.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டுகின்றனர்
மன்னார்குடி
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தில் பா.ஜ.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டுகின்றனர் என கி.வீரமணி கூறினார்.
பேட்டி
மன்னார்குடியில் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராணுவ வீரர் லட்சுமணன் நாட்டை காக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்துள்ளார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சென்றிருந்தார். அப்போது மரபு படி அமைச்சர் என்கின்ற முறையில் அரசு சார்பில் முதலாவதாக மரியாதை செலுத்த வேண்டும். அதற்கு மாறாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தான் மரியாதை செலுத்திய பிறகு அமைச்சர் மரியாதை செய்யட்டும் என கூறி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அதன் பின்னர் போலீசார் மரபு மாறாமல் அமைச்சருக்கு முன்னுரிமை கொடுத்து மரியாதை செய்ய வைத்தனர்.
வன்முறையை தூண்டுகின்றனர்
அப்போது அண்ணாமலையுடன் வந்த பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்கின்ற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்றே திட்டமிட்டு பா.ஜ.க.வினர் வன்முறையை தூண்டுகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளும் எந்த ஒரு போராட்டத்தை முன்னெடுத்தாலும் போராட்டத்தை கூர்மை படுத்த வேண்டும் என்று சொன்னால் அவர்கள் தேர்ந்தெடுக்கின்ற சட்டை கருப்பு சட்டை. பெரியார் மறைந்தாலும் உணர்வால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்தை தாண்டி டெல்லியிலும் தற்போது நுழைந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.