மக்கள் அதிருப்தியில் உள்ளதால்நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும்- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

மக்கள் அதிருப்தியில் உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்

Update: 2023-09-06 00:31 GMT


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை பா.ஜ.க.வினர் திரித்து தவறாக பரப்புரை செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதாலும், மேலும், 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையும் கருத்தில் கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்துள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கைகள் மீது, கூட்டணியிலுள்ள மற்ற கட்சியினர் தலையிட மாட்டோம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். பா.ஜ.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் அக்கட்சி படுதோல்வி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்