பரமக்குடி அருேக வாலிபர் அடித்துக்கொலை

பரமக்குடி அருேக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நண்பர்களுடன் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.

Update: 2022-12-21 18:45 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருேக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நண்பர்களுடன் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.

மது குடித்தனர்

சிவகங்கை மாவட்டம் கல்லனி கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் கண்ணன் (வயது32). இவர் மீது ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. அந்த வழக்கு சம்பந்தமாக நேற்று முன்தினம் பரமக்குடி கோர்ட்டுக்கு கண்ணன் வந்துள்ளார்.

இரவில் பரமக்குடி எமனேசுவரம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் அவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் கண்ணனை அடித்துக் கொலை செய்துவிட்டு, நண்பர்கள் தப்பியதாக தெரியவருகிறது. அதாவது, பாட்டில் சிதறல்கள் அங்கு கிடந்ததால் பாட்டிலாலும் தாக்கி இருக்கலாம் என தெரியவருகிறது.

ஒருவரை பிடித்து விசாரணை

நேற்று காலை, கண்ணன் பிணமாக கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் எமனேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கண்ணனுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்