சாப்டூர் வனப்பகுதியில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சாப்டூர் வனப்பகுதியில் இருக்கும் பெருமாள் கோவில் மொட்டை என்ற கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-22 20:30 GMT

பேரையூர்

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சாப்டூர் வனப்பகுதியில் இருக்கும் பெருமாள் கோவில் மொட்டை என்ற கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று சாப்டூர் வனத்துறை வனச்சரகர் செல்லமணி கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பக்தர்கள் செல்ல தடை

சாப்டூர் வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட புலிகள் வன சரணாலயம் ஆகும். இங்குள்ள பீட் 6-ல் பெருமாள் கோவில் மொட்டை என்ற பகுதிக்கு பக்தர்கள் யாரும் செல்லக்கூடாது. பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்த முயற்சி செய்து வருகின்றனர். கிடாய் வெட்டி சமைத்து உண்ணும் போது வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுகிறது.

இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும் வனப்பகுதிக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பெருமாள் கோவில் மொட்டை பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்று வழிபட அனுமதி இல்லை.

கடும் நடவடிக்கை

பக்தர்கள் யாரும் மீறி சென்று வழிபட்டால் வன பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த வருடம் பக்தர்கள் கிடாய் வெட்டி சாமி கும்பிட்டனர். இதனால் வனப்பகுதியில் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து 63 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்