அஸ்ரா கார்க் சென்னைக்கு இடமாற்றம்:கஞ்சா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்- புதிய தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் பேட்டி
கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என புதிதாக பதவி ஏற்ற தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் கூறினார்.
கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என புதிதாக பதவி ஏற்ற தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் கூறினார்.
தென்மண்டல ஐ.ஜி.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளட்டக்கிய தென் மண்டல காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அஸ்ராகார்க், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராக பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் புதிய தென்மண்டல ஐ.ஜி.யாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டார். நேற்று அவர் தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக பணிமாறுதல் ஐ.ஜி. அஸ்ராகார்க், நரேந்திரன் நாயருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பேட்டி
இதனை தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்ட ஐ.ஜி. நரேந்திரன் நாயர் நிருபர்களிடம் கூறுகையில், "தென் மண்டலத்தில் கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். அஸ்ரா கார்க் செய்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வேன். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்கும் வரை, அந்த பணிகளையும் கூடுதலாக கவனிப்பேன்" என்று தெரிவித்தார்.
புதிய தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயருக்கு, போலீஸ் அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.