மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

சின்னசேலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-17 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் வட்டார வள மையத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி பயிலும் வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் சம வாய்ப்பு வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார், வட்டார கல்வி அலுவலர்கள் தனபால், கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசு, ஆசிரியர் பயிற்றுனர்கள் வரதராஜன், சக்திவேல் மாரியப்பன், ரவிக்குமார், இல்லம் தேடி கல்வி திட்டம் பிரபாகரன் மற்றும் சிறப்பாசிரியர்கள் புஷ்ப தெரஸ், மணிசேகரன், தமிழ்ச்செல்வி, சாந்தி, ஜெய்கண்ணன் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இதே போல் தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பாதுகாப்பு நலன் சார்ந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவரும், பள்ளி மேலாண்மை குழு தலைவருமான பார்வதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் குணசேகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்