கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பல்நோக்கு சமூக சேவை சங்கம் மற்றும் இத்தாலி இன்டர்லைப் ஆன்லஸ் தொண்டு நிறுவனம் சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மீமிசலில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தகுமாரி தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் கருணாகரன் திட்ட விளக்க உரையாற்றினார். ஊர்வலம் மீமிசல் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு இருந்து தொடங்கி கடைவீதி வழியாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் ஆவுடையார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், மீமிசல் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்வில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ், திட்ட செயலாளர் மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஒன்றியங்களை சேர்ந்த ஆர்.புதுப்பட்டினம், மீமிசல், பாலக்குடி, ஆத்தி வயல், ஏம்பவயல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 300 சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டு ஊட்டச்சத்தின் அவசியத்தை பற்றி கோஷங்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். முன்னதாக கூட்டமைப்பின் தலைவி சுசீலா வரவேற்று பேசினார். முடிவில் பகுதி பணியாளர் ரோசாலிமேரி நன்றி கூறினார்.