குழந்தைகள் இல்ல மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலா
குழந்தைகள் இல்ல மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள ரெட்டியார்பட்டி அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் படிக்கும் 39 மாணவ, மாணவிகள் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவில் வட்ட கோட்டை, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், காட்சி கோபுரம் மற்றும் சூரியன் பூங்கா போன்ற இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன் செய்திருந்தார்.