விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-06-04 19:00 GMT

பெரம்பலூர்:

சி.ஐ.டி.யு.வின் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தை பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் நடத்தியது. கருத்தரங்கத்திற்கு மத்திய அமைப்பின் வட்ட தலைவர் அகஸ்டின், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினர். மத்திய அமைப்பின் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்ட செயலாளர் ராஜகுமாரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில தலைவர் சுப்ரமணியன், மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ராஜாராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவையுடன் பெற்றிட வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு எதிரான வாரிய உத்தரவை ரத்து செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாக நீடித்திட வேண்டும். முறையான மருத்துவ காப்பீடு திட்டம் கிடைத்திட வேண்டும். ஒப்பந்த பணிக்காலத்தை இணைத்து ஓய்வூதியம் கணக்கீடு செய்து பெற்றிட வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு பிறகு நிரந்தர வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்