தஞ்சை மருத்துவக்கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-04-13 19:59 GMT

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலத்தை முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சமூக மருத்துவத்துறை சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், இணைபேராசிரியர் சிவச்சந்திரன், துணை பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள ்கலந்து கொண்டனர்.

உலக சுகாதார நிறுவனம்

இதில் முதல்வர் பாலாஜிநாதன் பேசுகையில், உலக சுகாதார தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்களால் பெருமளவில் தாக்கும் நோயின் மீது கவனத்தை ஈர்க்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினமானது உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நாளையும் நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட 75-வது ஆண்டு ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "அனைவருக்கும் சுகாதாரம்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கருபொருளின் இலக்கு என்னவென்றால், கடந்த 70 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தை பேணுவதில் செய்யப்பட்ட சாதனைகளை நினைவு கூருவது, பொது சுகாதாரப் பணிகள் எப்படி கடந்த 70 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதை அறிவது.

முகக்கவசம் கட்டாயம்

தமிழ்நாடு அரசின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் 100 சதவீதம் கட்டாய முகக் கவசம் அணிந்து, நம்மை தொற்று நோய்களில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ மாணவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும்பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நமது உடல் சுகாதாரத்தைப் பேண, நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலத்தில் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் சமூ க மருத்துவத்துறையின் இணை பேராசிரியர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்