மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2023-10-05 17:58 GMT

பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு சார்பில் மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை தாங்கினார். தொடர்ந்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் சமூக நீதி-மனித உரிமைகள் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோலைமுத்து மாரியம்மாள் ஆகியோர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளுக்குரிய சட்ட பாதுகாப்பு, குழந்தை திருமணம், போக்ேசா சட்டம், உதவி எண்கள் 181, 1098 குறித்தும், சைபர் கிரைம் (1930) குற்றங்கள் குறித்தும், பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்