சிறந்த தொழில் சேவை நிறுவனங்களுக்கு விருது
சிறந்த தொழில் சேவை நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெயிளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தனியார் பொதுத்துறைகளை சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது, சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சிறப்பிக்கும் வகையில் அவர்களுகு்கு 2022-ம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு விருதுடன் ரூ.1 லட்சம் பாிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருது பெற விரும்பபவர்கள் tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.