லைவ் அப்டேட்ஸ்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம்...!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது.
அவனியாபுரம்,
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.
ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
9 சுற்றுகள் நிறைவில் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் 23 காளைகளை அடக்கி முன்னிலை பெற்றுள்ளார்.
அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் இதுவரை 45 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மாட்டு உரிமையாளர்கள் 20 பேர், மாடுபிடி வீரர்கள் 16 பேர், பார்வையாளர்கள் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
8 சுற்றுகள் நிறைவில் 544 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலை பெற்றுள்ளார்.
அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்றின் முடிவில், 23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் விஜய் தொடர்ந்து முதலிடம்
இதுவரை 544 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!
காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு துவங்கியதில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.
மாடுபிடி வீரரான கபிலன் மற்றும் காளை உரிமையாளரான சென்னை மாநாகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றும் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்கமல் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 11 பேர் நண்பகல் 12.30 மணி வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளை முட்டியதில் ஆயுதப்படை காவலர் உள்பட 19 பேர் காயம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3வது சுற்று நிறைவு பெற்றுள்ளது.
அவனியாபுரம்,
பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.
ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 3ம் சுற்று நிறைவு பெற்றுள்ளது. 3ம் சுற்றில் இதுவரை 192 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 3ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் அருண் குமார் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - இரண்டாம் சுற்று நிறைவு...!