15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் ஆட்டோ டிரைவர்

15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் ஆட்டோ டிரைவர்

Update: 2022-12-30 19:39 GMT

3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு மனு அளித்தும் 15 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் அலைக்கழிக்கப்படுகிறார்.

3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு மனு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது அலி (வயது52). இவருக்கு 18 வயது இருந்தபோது ரெயில் விபத்தில் சிக்கி 2 கால்களையும் இழந்துவிட்டார். அதன்பிறகு மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் அட்டை பெற்று, ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்கு ஜாகீதா என்ற மனைவியும், 17 வயதுடைய முகமது இர்சாத் என்ற மகனும், 17 வயதுடைய சாலிஹா என்ற மகளும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2 கால்களையும் இழந்த தனக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்டதுறையினரிடம் முகமதுஅலி மனு கொடுத்தார். ஆனால் இதுவரை அவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் முகமதுஅலி தனது ஆட்டோவில் அதிராம்பட்டினத்தில் இருந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.

15 ஆண்டுகள்

இது குறித்து முகமதுஅலி கூறும்போது, 3 சக்கர ஸ்கூட்டர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு வர சொல்வதும், பின்னர் திருப்பி அனுப்புவதுமாக கடந்த 15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகிறேன். மீண்டும் எனக்கு அழைப்பு வந்ததால் எனது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன். ஆனால் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுவரை 6 முறை வந்துவிட்டேன். எதற்காக எனக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்க மறுப்பதாக தெரியவில்லை. எனது நிலையை அறிந்து 3 சக்கர ஸ்கூட்டர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்