உத்தமபாளையத்தில் லாரி டிரைவரிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது

உத்தமபாளையத்தில் லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-08-16 17:11 GMT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் தேவர் சிலை அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு டீ குடிக்க நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் கத்திைய காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பினர்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்தமபாளையம் ஆர்சி. தெருவை சேர்ந்த ராஜ்குமார் (28), சிலுவை குருசு தெருவை சேர்ந்த ரோபின் (27) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்