எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு
எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தி்லுள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில், தமிழக அரசின் சார்பில் அவரது 102-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் உருவச்சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபரம் தாசில்தார் மல்லிகா, பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்ளிட்டவர்கள் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.