பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.10¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.10¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2023-04-13 22:17 GMT

அம்மாபேட்டை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொங்கணாபுரம், கோனேரிப்பட்டி, தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 453 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர். ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 519-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 469-க்கும் விற்பனை ஆனது. பருத்தி மொத்தம் ரூ.10 லட்சத்து 31 ஆயிரத்து 629-க்கு ஏலம் போனது. பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து பருத்தியை ஏலம் எடுத்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்