சிவகாசி,
சாத்தூர் தாலுகா என்.மேட்டுப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சரவணக்குமார் (வயது 26). டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சரவணக்குமார் தான் பணியாற்றி வரும் டிராவல்ஸ் அதிபர் ராஜவேலுக்கு பணம் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி வாணி சம்பவத்தன்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் சரவணக்குமாரை, வாணி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வேல்சாமி என்பவரும் சரவணக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த சரவணக்குமார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வாணி, வேல்சாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.