அருந்ததி நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா
அருந்ததி நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா
நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரி தெத்தி புதுரோடு சாலையில் அருந்ததி நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு கரகம், பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சூரி மாரியம்மன் கோவிலில் இருந்து பறக்கும் காவடி நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை பெரியாச்சி அம்மன், மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.