இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினருக்கு அமைச்சர் பாராட்டு
இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்
திருப்பத்தூர்
தமிழகத்தில் மாவட்டம் தோறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறங்காவலர் தேர்வு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் தலைவராக இலுப்பகுடியை சேர்ந்த புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உறுப்பினர்களாக கீழச்சிவல்பட்டியை சேர்ந்த வெள்ளையன் செட்டியார், தேவகோட்டை செல்வராஜ், திருப்பத்தூர் கவுரி கார்த்திகேயன், மானாமதுரை ஜெயமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சிவகங்கையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் இந்து சமய அறநிலை துறையின் இணை ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் திருப்பத்தூரில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை தலைவர் புவனேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் வெள்ளையன் செட்டியார், செல்வராஜ், ஜெயமூர்த்தி, கவுரி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர் ஆஷாஅஜீத், ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் திருஞானசம்பந்தம், ஹரி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.