குறைகளை தீர்க்க அலுவலர் நியமனம்

தேனி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குைறகளை தீர்க்கும் அலுவலரை நியமனம் செய்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-20 15:12 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட அளவில் குறைதீர்ப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, தேனி மாவட்ட குறைதீர்ப்பு அலுவலராக வக்கீல் சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் அடையாள அட்டை, சம்பளம் உள்ளிட்டவை தொடர்பான புகார்கள், குறைபாடுகள் இருந்தால் அதனை ombudsperson.theni@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர்ப்பு அலுவலரிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவே குறைகளை தெரிவிக்கலாம். இதுதொடர்பாக கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கோரிக்கை நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்