43 சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

விருதுநகர் மாவட்டத்தில் 43 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி முடித்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் நியமனம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-04 18:45 GMT

விருதுநகர் மாவட்டத்தில் 43 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி முடித்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் நியமனம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

நியமனம்

விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் பயிற்சி முடித்த வேல்முருகன் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். நரிக்குடியில் இருவிருதுநகர் மாவட்டத்தில் 43 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி முடித்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் நியமனம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.ந்த பாலசுப்பிரமணியன் திருச்சுழி கோட்டத்தில் தனி பிரிவில் பணியாற்றிய வேல்முருகனுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.புதுப்பட்டியில் பயிற்சி பெற்ற செல்வராஜ் எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்திலும், ராஜபாளையம் தெற்கில் பயிற்சி பெற்ற முருகானந்தம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திலும், சாத்தூர் போலீஸ் நிலையத்தில் பயிற்சி பெற்ற புகழேந்தி சாத்தூர் தனி பிரிவில் காளிராஜுக்கு பதிலும், சிவகாசி கிழக்கில் பயிற்சி பெற்ற மாடசாமி சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்திலும், தளவாய்புரத்தில் பயிற்சி பெற்ற ஜெயச்சந்திரன் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலையத்திலும், சிவகாசி கிழக்கில் பயிற்சி பெற்ற தங்கேஸ்வரன் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்திலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் பயிற்சி பெற்ற முருகேசன் சேத்தூர் போலீஸ் நிலையத்திலும், கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் பயிற்சி பெற்ற வெங்கடசாமி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திலும், விருதுநகர் கிழக்கில் பணியாற்றிய ரமேஷ் விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்திலும், எம்.ரெட்டியபட்டியில் பயிற்சி பெற்ற சரவணராஜ் கட்டுப்பாட்டறைக்கும், அருப்புக்கோட்டையில் பயிற்சி பெற்ற அரங்கநாதன் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையம்

மல்லி போலீஸ் நிலையத்தில் பயிற்சி பெற்ற ஹரி கிருஷ்ணன் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்திலும், விருதுநகர் மேற்கில் பயிற்சி பெற்ற பால்சாமி நெடுஞ்சாலை ரோந்து பணியிலும், சூலக்கரையில் பயிற்சி பெற்ற தியாகராஜன் விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்திலும், சேத்தூரில் பயிற்சி பெற்ற கருப்பசாமி சேத்தூர் போலீஸ் நிலையத்திலும், விக்கிரமங்கலத்தில் பயிற்சி பெற்ற வெங்கடேசன் நத்தம்பட்டி போலீஸ் நிலையத்திலும், உத்தப்பநாயக்கனூரில் பயிற்சி பெற்ற ராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திலும், பெருங்குடியில் பயிற்சி பெற்ற சுரேஷ் ஆவியூர் போலீஸ் நிலையத்திலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையத்தில் பயிற்சி பெற்ற பாலமுருகன் மம்சாபுரத்திலும், பெருங்குடியில் பயிற்சி பெற்ற அசோக்குமார் அருப்புக்கோட்டை தாலுகா போலீசிலும், மேலூரில் பயிற்சி பெற்ற கண்ணன் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகவும், சமயநல்லூரில் பயிற்சி பெற்ற கண்ணன் சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திலும், திருமங்கலம் டவுன் போலீசில் பயிற்சி பெற்ற ரவி விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்திலும், விருதுநகர் கிழக்கில் பயிற்சி பெற்ற லோகிதாசன் நெடுஞ்சாலை ரோந்து பணிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணன்கோவில்

திருமங்கலம் டவுனில் பயிற்சி பெற்ற தியாகராஜன் விருதுநகர் பாண்டியன் நகரிலும், கிருஷ்ணமூர்த்தி வீரசோழன் போலீஸ் நிலையத்திலும், பேரையூரில் பயிற்சி பெற்ற ஒளி அரசன் நரிக்குடியிலும், என்.பி.கோட்டையில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு வச்சகாரப்பட்டியிலும், எம்.கல்லுப்பட்டியில் பயிற்சி பெற்ற வேல்முருகன் கிருஷ்ணன்கோவிலிலும், கருப்பாயூரணியில் பயிற்சி பெற்ற பாலகிருஷ்ணன் சாத்தூர் டவுனிலும், அலங்காநல்லூரில் பயிற்சி பெற்ற சின்னசாமி இருக்கன்குடியிலும், பாலசுப்பிரமணியன் ஏழாயிரம் பண்ணையிலும், ராஜபாளையம் வடக்கில் பயிற்சி பெற்ற கணேசன் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இசக்கிமுத்து சிவகாசி டவுன் போலீசிலும், கீழ ராஜகுலராமனில் பயிற்சி பெற்ற மனோகரன் சேத்தூரிலும், கூடகோவிலில் பயிற்சி பெற்ற ஈஸ்வரன் திருத்தங்கலிலும், சாத்தூரில் பயிற்சி பெற்ற பூபதி இருக்கன்குடியிலும், ஆமத்தூரில் பயிற்சி பெற்ற அஸன் மைதீன் மாவட்ட தனிப்பிரிவிலும், கள்ளிக்குடியில் பயிற்சி பெற்ற பிரபாகரன் நரிக்குடியிலும், வச்சகாரப்பட்டியில் பயிற்சி பெற்ற பாலசுப்பிரமணியன் இருக்கன்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பணியிடம் சமுதாய புலனாய்வு பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒத்தக்கடையில் பயிற்சி பெற்ற நாகமணி திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்